பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த “கோயி மில் கயா” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20-ஆண்டுகள் ஆனது. ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி 2003- ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
“கோயி மில் கயா” வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மீண்டும் இப்படத்தை மறுவெளியீடு செய்வதாக திரைபடக்குழு அறிவித்துள்ளது.
‘கோயி மில் கயா’ இந்தியாவின் முதல் அறிவியல் புனைக்கதை திரைப்படம் ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக ஹிருத்திக் ரோஷனும், கதாநாயகியாக ப்ரீத்தி ஜிந்தாவும், கதாநாயகனுக்குத் தாயாக நடிகை ரேகாவும் நடித்து இருந்தனர்.
மன வளர்ச்சி அடையாத ஒருவரின் ஆழமான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் இக்கதையில் அவரது பயணம், அவரது தாய் மற்றும் நண்பர்களுடனான உறவு காட்டப்பட்டுள்ளது. அவரின் காதலி, அவர் கண்களால் வெளிப்பட்ட கதாபாத்திரத்தில் ஜாடூ என்ற அன்பான வேற்றுகிரகவாசி என படம் முழுவதும் இரசிகர்களை உணர்ச்சி பூர்வமாக கவர்ந்திருந்தது.
RAKESH ROSHAN – HRITHIK ROSHAN: ‘KOI MIL GAYA’ CELEBRATES 20TH ANNIVERSARY WITH RE-RELEASE ACROSS 30 CITIES… On the occasion of 20 years of #KoiMilGaya, the much-loved and hugely successful film is set to re-release at #PVR #INOX cinemas across 30 cities in #India from 4 Aug… pic.twitter.com/9vXIRm2NjT
— taran adarsh (@taran_adarsh) August 2, 2023
நாளை ஆகஸ்ட் (4.08.2023) முதல் (10.08.2023) ஆகிய 7 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள பிரபல திரையரங்குகளில் ‘கோயி மில் கயா’ மறு வெளியீடு செய்யவுள்ள நிலையில் இரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்