DEEP FAKE எனப்படும் AI தொழில் நுட்பத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். McAfee என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
சமூக வலைத்தளப் பக்கங்களில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் கஜோல் உட்பட பல பாலிவுட் நடிகர்களின் DEEP FAKE வீடியோக்கள் வெளிவந்த பின்னணியில், ஒரு வீடியோ அல்லது ஆடியோவின் நம்பகத்தன்மையை நம்புவதற்கு முன்பு நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று DEEP FAKE பற்றிய தமது கவலையை பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதோடு அவர் நின்று விடவில்லை. இந்தியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது, சமூக ஊடகங்களில் டீப்ஃபேக்குகள் தோன்றுவதைப் பற்றி பேசிய பிரதமர் மோடி , “AIக்கான உலகளாவிய விதிமுறைகள் தேவை என்று வலியுறுத்தினார். மேலும் AI தொழில் நுட்பம் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், அதே சமயம் அது சமூகத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டும் என்றும் உறுதிப்படுத்தினார்
மேலும் மற்றொரு சந்தர்ப்பத்தில் தான் ‘கர்பா’ நடனமாடுவதைக் காட்டும் ஒரு DEEP FAKE-யை எடுத்துக்காட்டி, “இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று டீப்ஃபேக்குகள் என்றும், அவை சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார். AI அதிகரித்து வரும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊடகங்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த சூழலில் தான் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, UNITED KINGDOM, ஜப்பான், பிரான்ஸ் ஜெர்மனி உட்பட இன்னும் பல உலக நாடுகளில் ஏறத்தாழ 7000 பேர்களிடம் McAfee என்ற மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 75 சதவீத மக்கள் DEEP FAKE பதிவுகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதில் 30 சதவீத இந்தியர்கள், தங்களால் அது உண்மையா போலியா எனக் கண்டறிய முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.
DEEP FAKE பதிவுகளை நம்புவதாக 22 சதவீத இந்தியர்கள் தெரிவித்ததாக என இந்த ஆய்வு கூறுகிறது. 38 சதவீத இந்தியர்கள் DEEP FAKE மோசடி மூலம் பெரும் பணத்தை பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
64 சதவீதம் பேர் DEEP FAKE மூலம் ஆன்லைனில் நடக்கும் பண மோசடி நடவடிக்கைகளைக் கண்டறிய முடிவதில்லை என்றும் ஆய்வின் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், McAfee ஆய்வறிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி, அமிதாப் பச்சன், அமீர் கான் ,ரன்வீர் சிங், பிரதமர் மோடி, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத், பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட DEEP FAKE யை எதிர்கொண்ட பிரபலங்களின் பட்டியல் இன்னும் நீளம்.
சைபர் கிண்டல் ,போலி ஆபாச படங்கள், பண மோசடிகள், பிரபலங்களின் ஆள்மாறாட்டம் , ஊடக நம்பிக்கை திரிபுகள், தேர்தல் செல்வாக்கு சிதைத்தல் அல்லது கூட்டுதல் மற்றும் வரலாற்று சிதைத்தல் என DEEP FAKE, தமது செல்வாக்கைச் செலுத்தி வருகிறது.
இதனால் பில்கேட்ஸ் உடனான பேச்சுவார்த்தையில் , பிரதமர் மோடி, நிர்வாகத்தில் AI ஐ ஒருங்கிணைப்பது, AI சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றியும் விவாதித்ததாக தெரிவித்திருந்தார்.
AI எனும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தை கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது .