உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசியலமைப்பு சட்டம் 124-வது பிரிவின் பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரசா வெங்கடநாராயண பாட்டி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது அவர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.