மணிப்பூரில் கூகி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் உள்ள நிலையில் இதனை நீக்குமாறு சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் தற்போது தான் கலவரங்கள் ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் நான்காம் தேதி காங்போப்கி மாவட்டத்தை சேர்ந்த கூகி பழங்குடி இன இளம்பெண்கள் இருவரை இளைஞர்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரபப்பட்டு வருகிறது.
இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் தீவிர விசாரணை நடத்தும் படி காவல்துறைக்கு அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.