மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவுக்கு 50% பெண் உறுப்பினர்கள் நியமனம்
Aug 20, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவுக்கு 50% பெண் உறுப்பினர்கள் நியமனம்

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கர், துணைத் தலைவர்கள் குழுவுக்கு 50% பெண் உறுப்பினர்களை நியமித்து பாலின சமத்துவத்தை  அமல்படுத்தியுள்ளார்.

Web Desk by Web Desk
Jul 21, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரலாற்றில் முதன் முறையாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர்துணைத் தலைவர் குழுவுக்கு  4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளார். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற  உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எஸ். பாங்னோன் கொன்யாக் என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்ட குழுவில் மொத்தம் எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள். மாநிலங்களவை வரலாற்றில் துணைத் தலைவர் குழுவில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதவே முதல் முறையாகும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், மாநிலங்களவை இருக்கை முற்றிலும்  டிஜிட்டல் மயமாகியுள்ளது. மாநிலங்களவைத் தலைவர் அவையின் அலுவல்கள், அவையில் வருகை, உறுப்பினர்கள் உரையாற்றும் விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தொடர்பான விஷயங்களுக்கு மின்னணு பலகைகளைப் பயன்படுத்துவார்கள்.

 

துணைத் தலைவர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் விவரங்கள்

பி.டி.உஷா: இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் புகழ்பெற்ற தடகள வீரர் ஆவார். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இவர் பாதுகாப்புக் குழு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு மற்றும் நெறிமுறைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

எஸ்.பாங்னோன் கொன்யாக்: இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ஏப்ரல், 2022 இல் நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆவார். இவர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு, வடகிழக்கு பிராந்திய  மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு,பெண்கள் அதிகாரமளித்தல் குழு, அவைக் குழு மற்றும் ஷில்லாங்கின் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார்.

டாக்டர் ஃபௌசியா கான்: இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2020 ஏப்ரலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்கள் அதிகாரமளித்தல் குழு, நுகர்வோர் விவகாரங்கள், உணவு  மற்றும் பொது விநியோகக் குழு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

சுலதா தியோ: இவர் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில்துறை குழு, பெண்கள் அதிகாரமளித்தல் குழு, இலாப அலுவலகத்திற்கான கூட்டுக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

மேற்குறிப்பிட்ட பெண் உறுப்பினர்களைத் தவிர,  வி விஜயசாய் ரெட்டி,  கன்ஷியாம் திவாரி, டாக்டர் எல் ஹனுமந்தய்யா மற்றும்  சுகேந்து சேகர் ரே ஆகியோரும் துணைத் தலைவர்களின் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சுலதா தியோ, எஸ் பாங்னோன் கொன்யாக், திருமதி பி.டி.உஷா, டாக்டர் ஃபௌசியா கான் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.

Tags: Parliament
ShareTweetSendShare
Previous Post

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி டிக்கெட் விற்பனை தொடக்கம்

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies