தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலலில் ஆடித்தபசு திருவிழா வெள்ளிக்கிழமை 21-07-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருக்காட்சி வரும் 31ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தின் சிறப்பான சிவாலயங்களில் ஒன்றான சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.இன்று அதிகாலை 3 மணி அளவில் கொடிப்பட்டம் பூரண மரியாதையுடன் திருவீதிசுற்றி வந்து அருள்மிகு கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கோடி மரத்திற்குக் கொண்டு வரப்பட்டது .கொடிப் பட்டத்திற்கு அபிஷேக அலங்காரம் செய்து சிறப்பான வழிபாட்டு பூஜைகள் நடந்தன.பின்பு வேதா மந்திரங்கள் திருமுறைகள் ஒலிக்க . பக்தர்கள் அரகர கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது திருக்கோயிலில் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.
வரும் ஜூலை 29ஆம் தேதி கோமதி அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஆடித் திருவவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு திருக்காட்சி நடைபெறும்.அப்போது ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்மிகு சங்கரநாராயணராக காட்சி அளிப்பார் . பின்னிரவு யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக சிவபெருமான் அம்பாளுக்குக் கொடுப்பார் . இந்த ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற இன்று திருக்கோயிலின் கொடி ஏற்றப்பட்டுள்ளது