கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுபாளையத்தை அடுத்த பில்லூர் அணை இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்ட த்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
தொடர் கனமழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தற்போது நீலகிரி மாவட்ட த்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் பில்லூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
தற்போது பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம் ஓடத்துறை, லிங்கா புரம், சிறுமுகை, காந்தவயல், ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.