தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.15% ஆக உயர்த்தி
2022-23 நிதியாண்டுக்களில் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வின் பலனை ஆகஸ்டு மாதத்தில் இருந்து சந்தாதரர்கள் பெறுவார்கள் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 2022ல், 2021-2022 ஆம் ஆண்டுக்கான
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023 மார்ச் மாதத்தில், டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில், 2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வட்டி விகிதமானது 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 2022-23-ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய வட்டி விகிதத்துக்கு நிதியமைச்சகம் மூலமாக அரசின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற சூழலில், இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆகஸ்டு மாதம் முதல் இதற்கான பலன் சந்தாதரர்கள் கணக்கில் கிட்டும் என்றும் பிஎஃப்தாரர்களின் கணக்குகளில் 8.15 சதவீத கணக்கில் வட்டியை வரவு வைக்குமாறு இபிஎஃப்ஓ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.