நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல், நான்காவது நாளான இன்று வரை மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும், முழு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால், மக்களவை கூட்டத் தொடர் தொடங்கிய சிறிய நேரத்தில் மக்களவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.