விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி .
May 22, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி .

2-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

Web Desk by Web Desk
Jul 25, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின்  போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (20.07.2023) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலே வெளிப்படுத்தினர்.

இதில் ரோகித் சர்மா 143 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 74 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கு பிறகு சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அடுத்த 13 ரன்னில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, அதற்கு பிறகு விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்து அசத்தினர்.  இவர்கள் இருவரும்டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இந்திய ஜோடிகள் பட்டியலில் 66.73 சராசரியோடு 3வது இடத்தில் உள்ளனர்.

வெளிநாட்டில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி தனது அடித்த முதல் சதம் இது என்பதும், இது கோலியின் 500-வது சர்வதேச போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரைப்பதித்த முதல் வீரர் என்ற பெருமை விராட் கோலி பெற்றுள்ளார். அதனடிப்படையில் டெஸ்டில் 29-வது சத்தத்தை அடித்த விராட் கோலி, டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார்.

விராட் கோலி 121 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-வது சதத்தை பதிவுசெய்தார். இதன் மூலம் அதிக சர்வதேச சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் முன்னிலை பெற்று அணியை டிக்ளேர் செய்தது.

வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியநிலையில், கனமழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைவிடாமல் மழை பெய்ததால், ஐந்தாம் நாள் ஆட்டமான போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

 

Tags: sportsnewsindiavswestindees2ndtestcricketmatch
ShareTweetSendShare
Previous Post

7 மாவட்டங்களுக்குக் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

Related News

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு!

காசா இனப்படுகொலை குறித்து சத்யா நாதெல்லாவிடம் சரமாரி கேள்வி!

பாக். தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து அச்சுறுத்த டிரம்ப் விரும்பவில்லை – மார்க்கோ ரூபியோ

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை : சட்டவிரோதமாக இரவில் மது விற்பனை செய்த நபர் கைது!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

இலங்கை : இறுதிப் போர் நினைவு நாளையொட்டி 12,400 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

திண்டுக்கல் : ரோஜா பூங்காவில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies