மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடக்கத்திலிருந்து இன்று வரை மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பிற்பகல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.மேலும் மசோதாக்கள் மீது விவாதம் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.