திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை இயக்குவதற்கான வலுவான சக்தி இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜெர்மன் வர்த்தகத்தின் 2024-ன் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு டெல்லியில் நடைபெறகிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜனநாயகம், மக்கள்தொகை, தேவை மற்றும் தரவு ஆகிய நான்கு வலுவான தூண்களின் மீது இந்தியா நிற்கிறது என கூறினார்.
மேலும், திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கான கருவிகள் என்றும், அவற்றை இயக்குவதற்கான ஒரு வலுவான சக்தி இந்தியாவில் உள்ளது எனவும் பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
குறிப்பாக, லட்சிய இந்தியா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரட்டை சக்தி, உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், எதிர்கால உலகின் தேவைகளுக்காக இந்தியா வேலை செய்வதாகவும் கூறினார்.