பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 10 கோடி உறுப்பினர்களை பாஜக எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரதீய ஜனதா கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், 10 கோடி உறுப்பினர்களை எட்டிய குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது!
இது வெறும் எண் மட்டுமுல்ல, இது பிரதமர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சான்றாகும், மேலும் வளர்ந்த இந்தியா பற்றிய அவரது பார்வையை நனவாக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிமொழி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.