கடந்த 2012 -13ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை , மிக தாமதமாக, 2015ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி , 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், 1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி, திமுக எம்பியும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு கதிர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி, கதிர் ஆனந்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் திமுக எம்பியும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான. கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. எனவே இன்று (ஜூலை 27) அவர் நேரில் ஆஜராக வேண்டுமென பிடிவாரண்ட் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்