தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் அரசியல் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை போன்று, தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இந்த பாதயாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் பங்கேற்கும் இந்த யாத்திரை, தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலைநிமிர செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். அரசியல், அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது என்பதை மாற்றி, மக்கள் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்,
அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு 8.5 கோடி தமிழர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தற்போது இராமேஸ்வரத்துக்கு அமிஷா வந்து இந்த யாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இன்றைய பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமை சேர்க்கும், ஊழல் திமுக தோற்கும் என தெரிவித்தார்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும் என இதே கருத்தை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.