பாகிஸ்தான் இரயில் விபத்து: 30 பேர் பலி… 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
May 25, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் இரயில் விபத்து: 30 பேர் பலி… 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Web Desk by Web Desk
Aug 9, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஹவேலியன் நகருக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழக்கம்போல நேற்று 500 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. சிந்த் மாகாணம் சஹாரா இரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு புறப்பட்ட இரயில், ஷாஹ்ஷாத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே உள்ள சரிஹாரி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தாறுமாறாக தரையில் ஓடியது.

பின்னர், பயங்கர சத்தத்துடன் அங்கிருந்த இரும்பு பாலத்தின் மீது மோதியது. இதில், இரயிலின் 8 பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி சிதறி கவிழ்ந்தன. இதில் இரயிலில் இருந்த பயணிகள் அங்குமிங்குமாக தூக்கி வீசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பயணிகளின் கூக்குரலாக இருந்தது. சத்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் ஓடிவந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 பயணிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், படுகாயமடைந்த 120க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் இரயிலின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 5-ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், 6-ம் தேதி காலையில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

இவ்விபத்து குறித்து பாகிஸ்தான் இரயில்வே அமைச்சர் காஜா ரபீக் கூறுகையில், “பாகிஸ்தானில் நேரிட்ட மிகப்பெரிய இரயில் விபத்து இது. இவ்விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலை காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், “இந்த இரயில் விபத்தை பார்க்கும்போது தீவிரவாதிகளின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்கின்றனர்.

அதேசமயம், ராணுவத் தரப்பிலோ, “இந்த இரயில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு செல்கிறது. அங்கு தெகிரீக் இ தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. ஆகவே, இரயில் விபத்தில் தாலிபான் தீவிரவாதிகள் சதி இருக்கலாம்” என்கிறார்கள். ஆக, இரயில் விபத்துக்கு காரணம் தீவிரவாதிகள்தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Tags: train accidentpakistan train accident todaypakistan traintrain accident today in pakistanpakistan railway accidentghotki train accidentaccident in pakistanpakistan train incidentpakistantrain pakistanpakistan train accidenttrain accident in pakistan
ShareTweetSendShare
Previous Post

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

Next Post

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் – பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கம்!

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அதி கனமழை எச்சரிக்கை – கேரளாவிற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்!

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்ற கார் – காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மூவர் பத்திரமாக மீட்பு!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies