அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறது ஊழல் திமுக அரசு - அண்ணாமலை
Aug 20, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறது ஊழல் திமுக அரசு – அண்ணாமலை

எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க ஊழல் திமுக அரசுக்கு மனம் வரவில்லை.

Web Desk by Web Desk
Aug 7, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப் பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப்பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால், தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் இருப்பதாகவும் இன்றைய நாளிதழில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்குப் பொருந்தும் அளவிலும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றான, மாணவர்களுக்கான உபகரணங்கள், குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை ஏன் உறுதி செய்யவில்லை?

கடந்த ஆண்டும் இது போல காலதாமதமாக, ஆண்டு இறுதியில் உபகரணங்கள் வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக் கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சருக்கும், பாடநூல் கழகத்துக்கும் மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதே முக்கியமாகப் போய்விட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் பன்னிரண்டு கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் 3 முதல் 4 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. பெருமளவில் நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை வழங்காமல் அலைக்கழிக்கிறதா தமிழக அரசு? அரசுப் பணத்தை எதற்குச் செலவிட வேண்டும் என்பதையே இவர்கள் உணரவில்லை.

ஆட்சிக்கு வந்ததும், பத்தாயிரம் சிதிலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், இந்த புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்று ஒரு ஆண்டுக்கும் மேலாக கேட்டும் இன்னும் பதில் வரவில்லை. எது எதற்கோ, எண்பது கோடி, நூறு கோடி என வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் ஆனால் நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனம் வரவில்லை இந்த ஊழல் திமுக அரசுக்கு.

மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப்பை உள்ளிட்டவற்றைக் குறித்த நேரத்தில் வழங்குவது தமிழக அரசின் கடமை என்பதை, அமைச்சரும் பாட நூல் கழகமும் உணர்ந்திருக்க வேண்டும். கோபாலபுரக் குடும்பத்தின் புகழ்பாடும் கடமைகள் காத்திருக்கலாம், மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: SchoolkarunanidhibjpTamilNadu BjpannamalaiDMKannamalai bjp
ShareTweetSendShare
Previous Post

திருக்குறள் தான் நம்மை வழிநடத்துகிறது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Next Post

மேட்டூர் அணையில் தொடர்ந்து குறைந்து வரும் நீர்மட்டம்…

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies