மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை (07.08.2023) நிலவரப் படி வினாடிக்கு 2862 அடியிலிருந்து 3077 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 57.94 அடியிலிருந்து 57.46 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,077கன அடியாக அதிகரித்தது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 22.83 டிஎம்சி ஆக உள்ளது. இந்நிலையில் இதன்மூலம் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அணையில் இருப்பு நீர் 15 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு திறக்க முடியும், எனவும் பாசனத்திற்கு நீர்த்தட்டுப்பாடு உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.