செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் இல்லை: அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jul 21, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் இல்லை: அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 7, 2023, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்டதில் சட்ட விரோதம் இல்லை என்றும், அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13-ம் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி அதிகாலையில் கைது செய்தனர். இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று 3-வது நீதிபதியும் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எல்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார். இடையூறுகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.

எனவே, அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருக்கும் நிலையில், நீதிபதிகளிடம் காயத்தை காண்பிக்கவில்லை. ஆகவே, செந்தில் பாலாஜியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது மிக மிக அவசியம்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், செந்தில் பாலாஜி மேலமுறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் இல்லை என்றும், கைது செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.

அதோடு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்றும், கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

Tags: dmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajiit raids senthil balajisenthil balaji casesenthil balaji house it raidsenthil balaji latest newssenthil balaji case updatesenthil balaji newssenthil balaji new housesenthil balaji latestsenthil balaji it raid
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையில் தொடர்ந்து குறைந்து வரும் நீர்மட்டம்…

Next Post

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

Related News

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies