நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஏவிய 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலம், சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு படுத்தப்பட்டு வந்தது.பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான்-3 விண்கலம் புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நகர ஆரம்பித்தது.
நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் கடந்த ஆறாம் தேதி, நுழைந்த சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு, 124 கிமீ x 1872கிமீ தொலைவில் சுற்றி வந்தது.
இந்த தூரத்தைப் படிப்படியாக குறைக்கும் சவாலான பணியைப் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
கடந்த, இரு தினங்களுக்கு முன், சந்திரயான் -3 விண்கலம் உயரம் குறைக்கும் முயற்சி நடைபெற்றது. அதன்படி 120 கிமீ x 4313கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டு சந்திரயான் -3 விண்கலம் நிலவு சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது.
Chandrayaan-3 Mission:
Even closer to the moon’s surface.Chandrayaan-3's orbit is reduced to 174 km x 1437 km following a manuevre performed today.
The next operation is scheduled for August 14, 2023, between 11:30 and 12:30 Hrs. IST pic.twitter.com/Nx7IXApU44
— ISRO (@isro) August 9, 2023
பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து இன்று, நிலவிற்கு 174 கிமீ x 1437 கிமீ சந்திரயான்-3 சுற்றும் வகையில் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உயரம் குறைத்தல் பணி வருகின்ற 14ஆம் தேதி, நள்ளிரவு 11.30 முதல் 12.30 நடைபெறும் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்க உள்ளது.