இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன மழையால் பல்வேறு ஆறுகளில் செல்லும் நீர் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், இன்று பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். இத்துடன், நேபாளத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 38-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனா் என்று
அதிகாரிகள் கூறினார்.