மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்… தி.மு.க. தான் காரணம் !
Jul 5, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்… தி.மு.க. தான் காரணம் !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்குத் தி.மு.க.வே காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 10, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றும் தொடர்கிறது.

இத்தீர்மானத்தின் மீது முதல் 2 நாட்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பேசினர். அந்த வகையில், கடந்த 8-ம் தேதி பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

இன்று காலை,நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்  பேசிய மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக்  1,977 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஜப்பானைச் சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் 1,627 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

இது மத்திய அரசு திட்டம் என்பதால், இக்கடன் தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கும். தமிழக அரசுக்கு எந்த கடன் சுமையும் இல்லை. ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தி.மு.க.வினர் பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம். அதேபோல, பொதுவாக எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் 750 படுக்கை வசதிகள் மட்டுமே இருக்கும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கை வசதிகள் இருக்கும். இங்கு தொற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வார்டுகள் கட்டப்படுவதால், கூடுதலாக 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

அதேபோல, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 99 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே, கட்டுமானப் பணியைக் குறிப்பிட்ட காலத்தில் தொடங்க முடியாமல் போனது” என்று கூறினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், “பொய் பொய், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்” என்று கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “யார் பொய் பேசுவது. வெட்கமாக இல்லையா” என்று ஆவேசமாகக் கூறினார். உடனே, தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். எனினும் விடாத நிர்மலா சீதாராமன், “நான் இன்னும் தமிழ்நாடு பற்றி நிறைய பேசவேண்டி இருக்கிறது. ஆகவே, ஓடாதீங்க நில்லுங்க. அப்படியே வெளியே போனாலும், தொலைக்காட்சியில் கண்டிப்பாக பாருங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.

Tags: bjpNirmala SitharamanBJP Nirmala SitharamanParliament Nirmala SitharamanNirmala Sitharaman Speech
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Next Post

மோடியின் புதிய கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies