நிலக்கரியின் பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்துள்ளது என மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
1983-84 ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி நுகர்வு 130.73 மெட்ரிக் டன் ஆக இருந்த. 2022-23 ஆம் ஆண்டில் 1115.02 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இதனை ஒப்பிடும்போது சுமார் 753% வளர்ச்சியுடன் இருந்தது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மின் துறைக்கு நிலக்கரி வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல். மின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ), கோல் இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்) மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனம் லிமிடெட் (எஸ்.சி.சி.எல்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான துணைக் குழு, அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும், மின் உற்பத்தி நிலையங்களில் முக்கியமான நிலக்கரி இருப்பு நிலையைக் குறைப்பது உள்பட மின் துறை தொடர்பான எந்தவொரு அவசர சூழ்நிலைகளையும் சமாளிக்கவும் பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை எடுக்க தவறாமல் கூடுகிறது.
இதுதவிர, இரயில்வே வாரியத் தலைவரைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் (ஐ.எம்.சி) அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர்; வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதைக் கண்காணித்து வருகின்றனர்.
நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கான புதிய பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறிவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் புதிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய துறை திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வு என்ற ஒரு துணைத் திட்டம் தொடர்கிறது. இதுதவிர, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்கள் குறித்த ஆய்வுகளையும் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்கிறது.