திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 12, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2026, 09:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான  உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பினால் கோடிக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் மக்களும் பெரும் மகிழ்ச்சிய அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கோடிக்கணக்கான முருகபக்தர்கள் மற்றும் தமிழ் மக்களின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது என்றும், கடந்த 6.1.2026 அன்று. திருப்பரங்குன்ற மலைஉச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஆர்ப்பரித்து எழுந்தலட்சக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் ஆர்வலர்களும் தீபம் ஏற்ற சென்றபொழுது. அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மலையேறக்கூடாத வகையில் 144 தடை உத்தரவை அன்றைய திமுக அரசு விதித்தது, அதைக் கண்டித்து தன்னெழுச்சியாக மதுரை மாநகர மக்கள் திமுக அரசைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த தன்னெழுச்சிமிக்க போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, நமது கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களோடு நானும் கைது செய்யப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தவெக அரசின் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும்  ரமேஷ் ஆகியோர் முந்தைய திமுக அரசு சொன்னதைப்போலவே, திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.

அமைச்சர்களது பேச்சு, தவெக அரசு ஸ்டாலின் அரசின் ஒரு கார்பன் காப்பியாகும் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அமைச்சர்கள் பேசிய விதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரப்படுமானால், அவர்களது அமைச்சர் பதவிக்களுக்கு ஆபத்தாக முடியும். அதை அறியாமல் தன்னுடைய விருப்பம்போல, வாய்க்கு வந்தப்படி பேசி திரிகிறார்கள் அமைச்சர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். என எச்சரிக்கின்றேன்.
ஆகவே, இம்மாதிரியான விரும்பத்தகாத செயல்கள் நடப்பதைத் தவிர்த்து. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக வேண்டும் என தவெக அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்முடைய பெருமைமிக்க கலாச்சாரப் பண்பாடு மற்றும் அழிக்க முடியாத சனாதன பண்புகள் ஆகியவற்றை உச்சநீதிமன்றம் பாதுகாத்து, கொடுத்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு புது எழுச்சியும், புத்துணர்ச்சியும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

Tags: Thiruparankundram deepamsupreme courtNainar Nagendran speechnainar nagendran statementBJP State President Nainar Nagendran nainar nagendran on eps
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

Next Post

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies