“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!
Oct 3, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

இந்திய” என்ற பெயரில் தொடங்கும் சட்டங்களைப்  “பாரதிய” என்று மாற்றும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கடந்த மாதம் “இந்தியா” என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியா என்கிற பெயரைத்  தவிர்த்து “பாரதம்” என்று பா.ஜ.க.வினர் அழைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில், “இந்திய” எனத் தொடங்கும் சட்டங்களையும் “பாரதிய” என்று மாற்ற மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இம்மசோதா இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றை பெயர் மாற்றம் செய்ய வழிவகைச் செய்கிறது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹீத, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயர் பாரதிய நாகரிக் சுரக் ஷ சன்ஹீத, இந்திய ஆதாரச் சட்டத்தின் பெயர் பாரதிய சக் ஷயா என மாற்றம் செய்யப்பட இம்மசோதா பரிந்துரைக்கிறது.

அதே சமயம், இம்மசோதா மேற்கண்ட சட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றம் செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. இச்சட்டங்களின் அடிப்படைக் கூறுகள் மற்றும் அடிப்படை அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட உள்ளன. ஒரு நபரை கைதுச் செய்வது முதல் அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களைக் கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது என பல விஷயங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதும் மாற்றி அமைக்கப்படவிருக்கிறது.

மேற்கண்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1860 முதல் 2023-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின் படியே குற்றவியல் நீதி அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆகவே, ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மேற்கண்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்ப பட்டு உள்ளது.

நாடாளுமன்றக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்று 3 சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் வரும். காரணம், புதிய தண்டனைச் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. அதேபோல, பாரதிய நியாய சங்ஹீத சட்டத்தின் மூலம் தேச துரோக வழக்கை இரத்து செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ParliamentAmitshahamit shah parliamentAmitshah SpeechNew BILLBharatiya Sanhita Suraksha BillBharatiya Nyaya Sanhita Bill
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Next Post

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Related News

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

ஜம்மு-காஷ்மீர் : செனாப் நதிக்கரையை தூய்மை செய்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!

டெல்லி : கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் மீட்பு – 4 பேர் கைது!

புதுச்சேரி : பேக்கரி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!

கன்னியாகுமரி : நவராத்திரியில் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies