வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற இராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகளில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்டார், இது பற்றி யோன்ஹாப் (Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நாட்டின் முக்கியமான வெடிமருந்து கிடங்குகள், வெடிமருந்து தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும் போது தொழிற்சாலைகளின் உறபத்தியை அதிகரிக்க தேவையான “கள வழிகாட்டுதல்” ஒரு வாரத்திற்குள் வந்து சேரும். நம்முடைய இந்தப் பயிற்சி வடகொரியாவின் மீதான ஆக்கிரமிப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.
கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சி இராணுவ விரிவாக்கக் கூட்டம் நடத்தியது. இதன் பின்னர் சில நாட்களிலேயே வட கொரியத் தலைவர் இராணுவ தொழிற்சாலைகளுக்கு வருகை தந்து, ஏவுகணை உற்பத்தி திறனை அதிகரிக்க ஆணையிட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் எந்தப் போரையும் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும், எதிரிகள் தங்கள் ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். எதிரிகள் நம்மீது தாக்குதலைத் தொடுத்தால் அவர்களை நிர்மூலமாக்குவதற்க்க அதிகமான இராணுவப் படையைக் கொண்டிருக்க வேண்டும். என யோன்ஹாப் (Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் தங்கள் வருடாந்திர உல்ச்சி (Ulchi) பயிற்சியை இம்மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வட கொரியா அதிபர் இராணுவ முகாமை ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.