வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!
Oct 19, 2025, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Web Desk by Web Desk
Aug 14, 2023, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தி.மு.க. அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. தற்போது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடந்து வருகிறது. பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துக் குவிப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் தாக்குதல் நடத்தியதோடு, அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணை வந்தது. ஆனால், மேற்கண்ட வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி இளங்கோவன், இவ்வழக்கிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: dmk senthil balajiMadurai high court
ShareTweetSendShare
Previous Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Next Post

5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை

Related News

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies