பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள், முடிவடைந்த நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல் இரண்டு கால் இறுதி போட்டிகளில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி, மற்றும் ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணி அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், சுவீடன் மற்றும் ஸ்பெயின் அணி மோதியது. இதில் முதல் பாதி போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த நிலையில், 81வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் சல்மா கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 88வது நிமிடத்தில் சுவீடன் அணியின் ரெபேக்கா கோல் அடித்தார். அடுத்த 89வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஆல்கா கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னேறினார். இதனால் முன்னேறிய ஸ்பெயின் அணி போட்டியில் வெற்றிப்பெற்றது.
ஃபிஃபா பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது.