இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!
Mar 15, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது கூட்டணி அரசியல் அங்கம் வகித்த முக்கியக் கட்சி ஒன்று விலகி, எதிர்கட்சிக் கூட்டணியில் இணைந்ததால், இம்ரானின் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இம்ரானின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, பல்வேறு பகுதிகளில் இராணுவ அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவருக்குக் கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் ஒப்படைக்காமல், விற்று பணத்தை மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி, இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 3 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றன. இதனால், இம்ரான் கானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: pakistanimran khanPakistan PM imran khanimran khan arrest
ShareTweetSendShare
Previous Post

பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா

Next Post

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies