செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!
Sep 18, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Web Desk by Web Desk
Aug 16, 2023, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சி விசாரணை இன்று தொடங்கி இருக்கிறது. இதனால், பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் முறைகேடாக செம்மண் குவாரியை ஏலம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த செம்மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக செம்மண்ணை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி, கௌதமசிகாமணியைத் தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.

அதேபோல, புகார்தாரரான ஓய்வுபெற்ற வானூர் வட்டாட்சியர் குமரபாலனும் உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. எனவே, குமரபாலனிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தும் வகையில், வழக்கு விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, அரசுத் தரப்பு சாட்சியான குமரபாலன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PonmudiMinister PonmudiPonmudi SonPonmudi Son gowthama SigamaniGowthama Sigamani
ShareTweetSendShare
Previous Post

லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!

Next Post

நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!

Related News

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies