அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mar 19, 2026, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெமிலியில் உள்ள தன்னுடைய சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறி, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கே.எம்.சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆளவந்தார் தனது சகோதரர் மகன் முத்துகிருஷ்ணனுக்கு எழுதிவைத்த சொத்துகளில் சிலவற்றை, அவரது உறவினரான தனக்கு எழுதிவைத்திருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அந்தச் சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முத்துகிருஷ்ணனின் இறப்புச் சான்று போலியானது என்று கூறி, இது தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ஆளவந்தாரால் கோவில்களுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

முத்துகிருஷ்ணன் 1997ஆம் ஆண்டில் இறந்ததாக மனுதாரரும், 1936ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டதாக அரசு தரப்பிலும் கூறப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, எந்த இறப்பு சான்று உண்மையானது என கண்டறிவதற்காக, காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி உயர் நீதிமன்றத் தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், 1943ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, மனுதாரர் கே.எம்.சாமி தாக்கல் செய்த இறப்பு சான்று உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

போலிச்  சான்றை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிப்பதற்கான மேலாளராகவே முத்துக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டதாகவும், அவரது மறைவிற்கு பிறகு அந்த சொத்துகளை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து, அதிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கையை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags: chennai high court
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு!

Next Post

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் இந்திய இரயில்வே துறை புதிய  திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல்!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies