அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. குஜராத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டி நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்தி உள்ளது. ஆனால் இந்தாண்டு இந்தியாவே முதன் முறையாக நடத்த உள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை இந்தியா வந்த நிலையில் தற்போது பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து தாஜ்மகாலில் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. பின்னர் மக்களின் பார்வைக்கு இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்குச் செல்லவுள்ளது. இறுதியாகக் குஜராத் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்து சேரும்.