'எனது வங்கம், போதையில்லா வங்கம்' பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு
Sep 5, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலம் போதை இல்லா நிலைமை மாற்ற முடியும்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ்  ‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று ஆகஸ்ட் 17 கொல்கத்தா ஆளுநர் மாளிகையில்  தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போதைப்பொருளைப் பயன்படுத்துவதால்   சமூகத்திற்கும் நாட்டிற்கும் தீங்கு ஏற்படுகிறது.  இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதால், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையைத்  தேர்வு செய்ய முடிவதில்லை. இது மிகவும் கவலைக்குரியது. இதனை மாற்ற அனைத்து நிலைகளிலும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலமே இந்த நிலைமையை மாற்ற முடியும்.

மன அழுத்தம் மற்றும் மற்றவர்களின் வற்புறுத்தல்  காரணமாக போதைப்பழக்கம் உருவாகிறது. போதைக்கு அடிமையாவதால், ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். வேறு பல்வேறு நோய்களும் இதிலிருந்து உருவாகின்றன. போதைக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான நண்பரின் குடும்பத்தினரின்,  கவனத்திற்கு அனைத்து இளைஞர்களும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

போதைப்பொருளை உட்கொண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த . ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், ஏதேனும் சமூக அமைப்புடன் பேச வேண்டும்.
நமது மன உறுதியால் எதிர்கொள்ள முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.  போதைப்பொருள் பயன்படுத்துதல்  மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார். போதைப் பொருள் வாங்குவதற்காக செலவிடப்படும் பணம் குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்கள், தங்கள் சொந்த நன்மைக்காகவும், சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து வெளியே வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர்களே நமது  மிக முக்கியமான சொத்துக்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த செலவிட வேண்டிய நேரமும் ஆற்றலும், போதை காரணமாக வீணடிக்கப்படுகிறது. மாணவர்கள் தவறான திசையில் செல்கிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். தவறு நடப்பது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

திமுக குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது- அண்ணாமலை 

Next Post

மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies