மீனவ மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியளித்த திமுக, குமரி மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தேசியச் சிந்தனை மிக்க குமரி மண்ணின் பத்மநாபபுரத்தில், பெரும் மக்கள் திரள் சூழ சிறப்புற நடந்தேறியது.
குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி, சிறை சென்று, பின்னர் இதே தொகுதியில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா குஞ்சன் நாடார், 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்புறப் பணியாற்றிய ஐயா பாலச்சந்திரன் ஆகியோரை தேர்ந்தெடுத்த தொகுதி இன்று, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கத் துணை போகும் மனோ தங்கராஜால் தன் சிறப்பை இழந்து நிற்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் ஏமாற்றுக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம். (5/5) pic.twitter.com/V1AuRGkFLo
— K.Annamalai (@annamalai_k) August 17, 2023
மீனவ மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குமரியில் ரப்பர் பூங்கா அமைப்போம், தொழில் நுட்பப் பூங்கா அமைப்போம், வாழைப்பழம், நெல், கரும்பு என குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியளித்த திமுக, குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
குமரி கிராம்புக்கும், மார்த்தாண்டம் தேனுக்கும், மட்டிப் பழத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு. மனோதங்கராஜ் உறவினரோ 24 மணி நேர பார் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மோடியின் முகவரி : பத்மநாபபுரம்
விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு திட்டத்தில் பலனடைந்த நாஞ்சில் நாடு உற்பத்தி நிறுவனம் திரு செல்லத்துரை, விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் பலனடைந்த திரு உண்ணிகிருஷ்ணன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திரு.கணேசன், தேசிய தோட்டக்கலை மானியத் திட்டத்தில் பலனடைந்த காய்கறி வியாபாரம் செய்யும் நாராயணப் பெருமாள் மற்றும் திரவியம். இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் ஏமாற்றுக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.