"திமுகவின் நீட் இரகசியம்" அம்பலப் படுத்திய அண்ணாமலை
Jan 21, 2026, 04:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“திமுகவின் நீட் இரகசியம்” அம்பலப் படுத்திய அண்ணாமலை

நீட் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழகத்தில் இருக்கும். திமுகவின் பித்தலாட்டம் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது.

Murugesan M by Murugesan M
Aug 18, 2023, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் வருவதற்கு முன் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மெரிட் லிஸ்ட்டை விற்று அதன் மூலமாக பணம் பார்ப்பது தான் திமுக . அதனால் தான் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் என்று  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் நீட் ரகசியத்தை உடைத்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம், குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று  மேற்கொண்டார். பாத யாத்திரையில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களை அண்ணாமலை பெற்றார். குளச்சல் பகுதி மக்கள் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றிய அண்ணாமலை,

“இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம், ரூ7,53,000 கோடி கடன் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடன் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் கடன் என்பது சராசரியாக ரூ3,52,000 ரூபாயாக உள்ளது. கன்னியாகுமரியின் வளர்ச்சிக்காக பொன் ராதாகிருஷ்ணன்  கொண்டு வந்த ரூ48 ஆயிரம் கோடியில், ரூ20,000 கோடியை கூட பயன்படுத்தவில்லை. விவசாயத்திற்கு பெயர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த இரண்டு வருடங்களில் கிராம்பு, தேன் மற்றும் மட்டி பழத்திற்கு புவிசார் குறியீட்டை பாரத பிரதமர் வழங்கியுள்ளார்.

நீட் தேர்வுக்கு  முன்பு மருத்துவ படிப்பை வைத்து திமுக பணம் சம்பாதித்தனர். தமிழகத்தில் இதுவரை ஆறு முறை திமுக ஆட்சி செய்துள்ளது. ஆறு முறை ஆட்சியில் இருந்தும் தமிழகத்திற்கு ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திமுக கொண்டு வந்துள்ளது.
தனியார் கல்லூரிகளுக்கு மருத்துவ சீட்டை விற்று பணம் பார்ப்பது தான் நீட்டிற்கு முந்தைய ரகசியம், அதை நீட் தேர்வு உடைத்திருக்கிறது.  திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சராக இருந்த  ஆற்காடு வீராசாமி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருகிறார்.
நீட்டுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி காண என்ட்ரன்ஸ் எக்ஸாம் லிஸ்ட் திமுக கைக்கு வந்துவிடும். இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அந்த லிஸ்ட் கொடுத்து விடுவார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரி அந்த லிஸ்டில் இருக்கும் பெயர்களை பார்த்து யாருக்கெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்குமோ அந்த மாணவர்களை அழைத்து தனியார் மருத்துவக்  கல்லூரியில் டோக்கன் போட்டுவிட்டு சீட்டை வழங்கி விடுவார்கள்.
கவுன்சிலிங் அரசு கல்லூரியில் சீட் கிடைத்தவுடன் தனியார் மருத்துவக் கல்லூரியில் போடப்பட்ட டோக்கன் காலி ஆய்டும். இந்த இலவசமான சீட்டை எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமும் எழுதாத ஒரு மாணவருக்கு 1.5 கோடி ரூபாய்க்கு விற்று விடுவார்கள், இதுதான் திமுகவின் விஞ்ஞான ஊழல். ஆறு முறை ஆட்சியில் இருந்த திமுக மொத்தமாக தமிழகத்துக்கு கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் வெறும் ஐந்துதான்.  தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக முக்கியத்துவம் கொடுத்தார்கள், அதற்கான காரணம் அதனுடைய நிறுவனர்கள் திமுகவை சார்ந்தவர்கள்.

உதயநிதி ஸ்டாலின் நீட்டினுடைய ரகசியத்தை சொல்ல வேண்டாம் நானே சொல்லிடுறேன்,
தனியார் கல்லூரிகளுக்கு மெரிட் லிஸ்ட்டை விட்டு அதன் மூலமாக பணம் பார்ப்பது தான் நீட் வருவதற்கு முன் இருந்த ரகசியம்.

மோடி  23 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை, தாய் இறந்த பொழுது கூட மூன்று மணி நேரத்தில் அரசு வேலைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார்.
மனோ தங்கராஜ் பிரதமரைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் மூச்சு இருக்கிறதா என்று கேட்கிறார் இன்னொரு முறை அந்தப் பதிவை போட்டால் நானே நேரில் வருவேன்.
தமிழ்நாட்டில் படங்களுக்கு ரிவ்யூ தருவதில் ப்ளூ சட்டை மாறன் அல்ல நம்பர் ஒன் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் அவர் சொன்ன 6100 கோடியில் ஆறு ரூபாய் கூட இன்னும் வரவில்லை.  பாஜக குற்றச்சாட்டு வைத்த பிறகு அந்த குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து சபரிசன் ரிசைன் செய்தார் அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பதிவில் இருந்து விலக வேண்டும் என கேள்வி எழுப்பனார்.  தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின்  நடத்தி வரும் அறக்கட்டளையின் முகவரியும், நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் முகவரியும் ஒன்று அந்த அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. பிடிஆர் பேசி நான்கு மாதங்கள் ஆகின்றன அதிலிருந்து தெரிகிறது அவர் பேசிய ஆடியோ உண்மைதான் என தெரிவித்தார்.

தமிழக முதலீட்டாளர்கள் உத்திரப்பிரதேசத்தில் தொழில் முதலீட்டாளர்கள் வழங்கிய பணம் பத்தாயிரம் கோடி ரூபாய் ஆனால் தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீட்டிற்காக கொண்டு வந்தது 2000 கோடி ரூபாய் தான், ஆனால் இதுவரை எந்த  தொகையும் வரவில்லை  என தெரிவித்தார்.

18,000 பள்ளிகளை திறந்த கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை இல்லை. தமிழகத்திலே சுயமாக படித்து வளர்ந்து முன்னேறி கொண்டிருக்கும் சமுதாயத்திற்கு மரியாதை இல்லை.
திராவிட மாடல் அரசு நாங்கள் கட்சி திறந்த பிறகு தான் தமிழ்நாடு வளர்ச்சி கண்டிருக்கிறது என்று சொல்வது, உலகத்திலேயே இது போன்ற பொய்யை யாரும் சொன்னதில்லை என தெரிவித்தார்.

நீட் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழகத்தில் இருக்கத்தான் போகிறது.
இன்னும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகள், முதல் தலைமுறை குழந்தைகள் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தான் போகிறார்கள். திமுகவின் பித்தலாட்டம் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவதற்கு குமரி மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Tags: en mann en makkaannamalai bjpk annamalai lok sabha 2024en man en makkal yatra rameshwaramk annamalai interviewk annamalai speechk annamalai ipsannamalai en mann en makkalk annamalai newsk annamalai india todayk annamalai padayatra updatesen mann en makkal annamalaik annamalai news todayannamalai newsen makkalk annamalai latest interviewbjp k annamalaidetails of en mann en makkal rallyk annamalai latest speechen mann en makkalen mann en makkal livek Annamalai Bjpk annamalai exclusiveen mann en makkal rallyen man en makkal amit shahbjp annamalaik annamalai latest newsen mann en makkal yatraen mann en makkal inaugurationannamalaik annamalai on neet billannamalai en mann en makkal rallyen mann en makkal in rameshwaramEn man En makkalk annamali on padyatraen maan en makkalen mann en makkal yatraik annamalaipadmaja joshi k annamalaiannamalai en maan en makkal
ShareTweetSendShare
Previous Post

கேப் வெர்டே அருகே படகு கவிழ்த்தில் 63 பேர் உயிரிழப்பு!

Next Post

சேலம் திருச்சி இடையே மெட்ரோ இ ரயில் சேவை தொடங்க திட்டம்!

Related News

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

தொட்டபெட்டாவில் பூத்துக்குலுங்கும் இமயமலை பூக்கள்!

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா – 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!

ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு – அமெரிக்க வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய அதிபர்!

இளைஞரின் உயிரை பறித்த வைரல் வீடியோ – பாலியல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் – சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

கடும் பனிப்பொழிவுக்கு இடையே ரீல்ஸ் – அடுத்து நடந்த பயங்கரம்!

என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies