மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டனர். இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுவரை 56 உடல்களை மீட்கப்பட்டு மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் படகில் இருந்து கடலில் குதித்து நீந்திய 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், கவிழ்த்த படகை மீனவர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்த கடலோரக் காவல்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உயிர்பிழைத்தவர்களை கரம் நீட்டி வரவேற்போம் என்றும் உயிரிழந்தவர்களை உரியமரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்வோம் என்றும் செய்தியாளர்களிடம் கேப் வெர்டெயின் அமைச்சர் பிலோமினா தெரிவித்துள்ளார் .