நிலவின் புகைப்படத்தை எடுத்த லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.
Jul 7, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவின் புகைப்படத்தை எடுத்த லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.

நிலவை நெருங்கிய சந்திரயான்-3, விக்ரம் லேண்டரின் உயரத்தை இஸ்ரோ குறைத்துள்ளது.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக அருகாமையில் எடுத்த புகைப்படங்களின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டரின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ரூ610 கோடி செலவில்,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்.3.எம்4 ராக்கெட் மூலம்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த சந்திரயான்-3 விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலன், ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் என அடங்கியது. இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன.

பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த, 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவை சுற்றி வருவதற்கான துாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகள், 6, 9, 14 மற்றும் 16ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்தகட்டமாக, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து செல்லும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாகப் பிரிந்தது. இதுவரை லேண்டர் சாதனத்தை இயக்கி வந்த உந்து கலன், இனி நிலவைச் சுற்றி வந்து தன் ஆய்வை மேற்கொள்ளும். இதில் உள்ள சிறப்பு தொலைநோக்கி, பூமி குறித்து ஆய்வு செய்யும்.

Chandrayaan-3 Mission:
The Lander Module (LM) health is normal.

LM successfully underwent a deboosting operation that reduced its orbit to 113 km x 157 km.

The second deboosting operation is scheduled for August 20, 2023, around 0200 Hrs. IST #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/0PVxV8Gw5z

— ISRO (@isro) August 18, 2023

சந்திரயான்-3 ஆகஸ்டு15 மற்றும் ஆகஸ்டு17ம் தேதிகளில் லேண்டர் நிலவை மிக நெருக்கமாக எடுத்த புகைப்படங்களின் காணொளியை இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும், பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, இன்று 4:00 நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள லேண்டரின் தூரம் 113 x 157 கி.மீ., வரை குறைக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக உயரத்தைக் குறைக்கும் பணி ஆகஸ்டு 20ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan-3 Mission:

View from the Lander Imager (LI) Camera-1
on August 17, 2023
just after the separation of the Lander Module from the Propulsion Module #Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/abPIyEn1Ad

— ISRO (@isro) August 18, 2023

Tags: ISROchandrayaan 3 moon missionisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.

Next Post

முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies