ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், இராணுவ வீரர்கள் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, கட்டுப்பாட்டுக் கோடு அருகே மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.
அதனைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் “5 ஏகே ரக துப்பாக்கிகள், 8 ஏகே டி ரக துப்பாக்கிகள், 7 9mm துப்பாக்கிகள்,1 (15.9mm) துப்பாக்கிகள், 415 ஏகே (7.62mm) துப்பாக்கிகள், 2 ஏபி 7.62mm துப்பாக்கிகள் உட்பட 4 கைக்குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.