“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!
May 21, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” என்கிற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக காணொளி வாயிலாகவே பிரிக்ஸ் மாநாடு நடந்தது.

இந்த நிலையில், 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் நகரில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நேரடியாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஜோகன்ஸ்பர்க்கில் முக்கியத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், தாய் நாடு திரும்பும் மோடி, செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேஸியாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Tags: PM ModiModi Meeting
ShareTweetSendShare
Previous Post

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

Next Post

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Related News

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

பாகிஸ்தானுக்கு 50% சலுகையில் J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies