ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்ப்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலாவது ஆட்டத்தைப் போல் இரண்டாவது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்புக் காட்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த அயர்லாந்து முதல் வெற்றியைப் பெற கடுமையாக போராடும். எனவே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.