நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தரையில் கால் பதித்தது. சுமார் 4 மணி நேரம் கழித்து, லேண்டரிலிருந்து ரோவர் நிலவில் இறங்கி ஆய்வு பணியைத் தொடங்கி உள்ளது. ரோவர் மற்றும் லேண்டர் அங்கிருந்து 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்தியா தான் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடாகும்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து:
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரடி ஒளிபரப்பாக கண்ட, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இஸ்ரோ மற்றும் சந்திரயான் -3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.
I once again congratulate the ISRO team and all fellow citizens for successful deployment of Pragyan-rover from inside Vikram-lander. Its rolling out a few hours after the landing of Vikram marked the success of yet another stage of Chandrayan 3. I look forward with excitement,…
— President of India (@rashtrapatibhvn) August 24, 2023
குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில், வரலாறு படைத்த நாள் இன்று.
சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் வரலாறு படைத்தது மட்டுமல்லாமல், புவியியலின் கருத்தையும் மாற்றியமைத்துள்ளனர்! இது உண்மையிலேயே ஒரு முக்கியமான சந்தர்ப்பம், வாழ்நாளில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இஸ்ரோ மற்றும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன், மேலும் அவர்கள் பற்பல சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறேன்.
சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு பெரிய சாதனை என்று நான் நம்புகிறேன். நவீன அறிவியலுடன் இந்தியா தனது வளமான பாரம்பரிய அறிவுத் தளத்தை மனிதகுலத்தின் சேவையில் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது “.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக இஸ்ரோவிற்கும், இந்தியர்களுக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்திய நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவத்தில் இந்த முயற்சியை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது. இந்த சாதனை எதிர்கால தரையிறங்கும் திட்டங்கள் மற்றும் கோள் ஆராய்ச்சியில் பிற தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த தருணம், விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் எழுச்சி” என்று விவரித்துள்ளார். மேலும் இது நமது அறிவியல் திறன் மற்றும் அசைக்க முடியாத உறுதிக்கு ஒரு சான்று என்று கூறியுள்ளார். விண்வெளித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் நமது நாட்டின் அர்ப்பணிப்பு உலகளாவிய தலைவராக மாற வழிவகுத்துள்ளது.
கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், சந்திரயான் -3 இல் அனைத்தயும் இஸ்ரோ திட்டமிட்டதால், இது தென் துருவத்தில் சரியான தரையிறக்கத்திற்கு வழிவகுத்தது.
சந்திரனில் விக்ரமின் தரையிறக்கம் “21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது” என்பதை நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார்.
PM @narendramodi just had a conversation with ISRO Chief S. Somanath to extend his hearty congratulations on the remarkable achievement of Chandrayaan3's successful landing on the Moon.#Chandrayaan3 #Chandrayaan3Landing @PMOIndia @narendramodi @isro @Murugan_MoS @PIB_India pic.twitter.com/bDVZrddh0E
— PIB in Tamil Nadu (@pibchennai) August 23, 2023
தொலைபேசியில் மோடி வாழ்த்து
சந்திரயான் – 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்து தொலைபேசி வாயிலாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும்; புதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.