சந்திரயான்-3 வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்துள்ளனர். விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்றுச் சாதனைக்கு உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
🇮🇳 – The 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 to reach the lunar south pole.
That's got a nice ring to it 👏A proud moment for each one of us & a big congratulations to @isro for all their efforts.
— Rohit Sharma (@ImRo45) August 23, 2023
சந்திரயான்-3 வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா தனது எக்ஸ் பதிவில், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்பதைக் கேட்பதற்கே, சிறப்பாக உள்ளதாகப் பதிவிட்டுள்ளார். இது நம் ஒவ்வொருவருக்கும் பெருமைமிகு தருணம் என்று தெரிவித்துள்ள அவர், இஸ்ரோவின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் எக்ஸ் பதிவில், சந்திரயான் 3 குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் தேசத்தைப் பெருமைப்படுத்தி உள்ளதாகப் புகழ்ந்துள்ளார்.
Many congratulations to the #Chandrayaan3 team. You have made the nation proud 🇮🇳
Jai Hind!— Virat Kohli (@imVkohli) August 23, 2023