சந்திரயான்-3 நிலவில் தடம் பதிக்க, காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ மற்றும் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு, தமிழக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிலவின் தென்துருவ வரலாற்றுபூர்வ சந்திரயான் 3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசமும் வெளிநாடுவாழ் இந்திய சமூகமும் பெருமிதம் கொள்கின்றன. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவைச் சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள். இதுதான் தடுக்க முடியா இந்தியா எனத் தெரிவித்துள்ளார்.
The carrier of a billion dreams made soft landing on the Moon successfully!
On this historic day, as India emerges into an indomitable space power under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl, heartiest congratulations to team @isro for touching down on the… pic.twitter.com/PsfsyhcT96
— K.Annamalai (@annamalai_k) August 23, 2023
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கவேண்டும் என்பது நமது நாட்டின் கனவு. கோடிக்கணக்கான மக்களின் கனவு இது. தற்போது, இந்தக் கனவு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக நாளில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா எல்லையில்லா சக்தி கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இணையமைச்சர் எல்.முருகன் தனது பதவில்,
இந்தியாவின் வரலாற்று தருணம்! நிலவின் மேல் பரப்பில் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு இந்தியா எனத் தெரிவித்துள்ளார்.
Historic Moment For India🇮🇳!
India is on the moon, it becomes the first country to make a soft landing on the South Pole of the moon.
#Chandrayaan3landing #चंद्रयान_3 #VikramLander pic.twitter.com/HUbF0vaqkr
— Dr.L.Murugan (@Murugan_MoS) August 23, 2023
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023
இதேபோல், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பதிவில், இதைவிட மிகவும் அற்புதமான தருணம் இருக்கவே முடியாது. இதுவே மிகச் சிறந்த தருணம். உலக அளவில் சாதனை படைத்த இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.
இதேபோல், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோவின் இந்தச் சாதனைக்கு வாழ்த்துக்கள் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவிக்கையில், முதன்முறையாக, நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசத்திற்குப் பெருமைக்குரிய அடையாளம் கிடைத்துள்ளது. சந்திரயான் 3 சாதனையை , அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் வியந்து பார்த்து வரும் வேளையில், நீங்கள் எங்களைப் பெருமைப் படுத்தியுள்ளீர்கள், எனவே, இஸ்ரோ குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
What an incredible moment! Congratulations to @isro for the successful landing of #Chandrayaan3 on the moon this morning. Today India became the first country to successfully achieve a soft landing on the southern polar region of the moon. https://t.co/2D6qSmneUp
— Sundar Pichai (@sundarpichai) August 23, 2023
சந்திரயான் 3 வெற்றி குறித்து, நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில், இந்தியர் அனைவருக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை இது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Chandrayaan-3 WILL BE ABSOLUTE SUCCESS —- MARK MY WORDS . Congratulations @isro .. IN ADVANCE .. on this spectacular success .. I AM SO SO HAPPY AND PROUD … congratulations to @NambiNOfficial too .. Vikas engine delivers yet once again during the launch.…
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 23, 2023
இதேபோன்று அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.