இந்தியாவில் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதில் செப்டம்பர் 29-ஆம் தேதி வங்கதேசம் – இலங்கை அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. அதே நாளில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும், தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.
செப்டம்பர் 30-யில் இந்தியா – இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகளும் விளையாடவுள்ளன. தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி இங்கிலாந்து – வங்கதேசம் அணிகளும், நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன.
அதேபோல் அக்டோபர் 3-யில் ஆஃப்கானிஸ்தான் – இலங்கை அணிகளும், இந்தியா – நெதர்லாந்து அணிகளும், பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி ஒருநாள் மட்டும் ஓய்வு, அக்டோபர் 5-ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் ஐதராபாத் மைதானத்தில் 3 போட்டிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், 2 பயிற்சி ஆட்டங்களும் ஐதராபாத் மைதானத்தில் தற்போது நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.