செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்
May 18, 2025, 04:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Web Desk by Web Desk
Aug 25, 2023, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனால் இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பிய தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரிய வந்தது.

வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டிப் புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர் .

இதுதொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ்பெனர்ட் கூறும்போது, “மிகவும் துல்லியத்துடன் சமீபத்தில் அளவீட்டை பெறுவது மிகவும் சிறப்பாக உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய ஆய்வு முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பைப் பயனுள்ளதாக்குகின்றன” என்றும் தெரிவித்தார்.

Tags: worldnewsNASAmars
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Next Post

போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Related News

விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!

பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்!

அமெரிக்கா : பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதி விபத்து!

பாரத மக்கள் மருந்தகம் கடையில் மர்ம நபர் கைவரிசை : 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை!

இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவிய மைக்ரோசாப்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

இந்தோனேசியாவில் 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

அமெரிக்கா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் – அதிபர் ட்ரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies