சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!
Oct 9, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலவின் வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆகவே, நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விணைவெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவும் இந்த வெற்றியை கொண்டியது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா காம்போஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை, நியூயார்க்கில் உள்ள நிரந்தரத் தூதரங்களில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒன்றுகூடி நாங்கள் கொண்டாடினோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகைக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செந்தியாளர்களைச் சந்தித்த ருசிரா காம்போஜ், “சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மனிதகுலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாங்கள் நிலவின் தென்துருவத்தில் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைகிறோம். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உலகில் எந்த நாடும் இன்றுவரை எட்டமுடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்திருப்பதுதான். இது இந்திய விஞ்ஞானிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இந்தியாவின் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, இந்தப் பணியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் எதிர்கால அறிவியல் சாதனைகளுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Chandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

Next Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies