செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!
May 20, 2025, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தி.மு.க.வில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.   போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வருமான வரித்துறையினரும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர், நெஞ்சுவலி, மருத்துவமனை, அறுவைச் சிகிச்சை என பல சம்பவங்கள் அரங்கேறி, இறுதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை 25-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜி வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அதேசமயம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே, இன்று காலை காணொளிக் காட்சி வாயிலாக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 28-ம் தேதிவரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

Tags: dmk senthil balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் ஆகஸ்ட் 27-ல் அமித்ஷா பிரசாரம்!

Next Post

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies