அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!
May 28, 2025, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு யுத்தத்தின்போது கணிசமானப் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அப்பகுதிக்கு அக்ஷாய் சின் என்று பெயர் சூட்டியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் தங்களது நிலப்பகுதி என்றும், அது தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதன் பிறகும், அண்டை நாடானா சீனா, நமது நாட்டின் எல்லையில் அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறு நுழைந்து நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், லடாக் எல்லையில் நமது இராணுவம் கூடுதல் படைகளை குவித்திருக்கிறது.

இதையடுத்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து சீனாவிடம் இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபரிடம் ஜி ஜின் பிங்கிடம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், சீனா அடங்குவதாக இல்லை. இந்த நிலையில்தான், சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடத்தில், சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷாய் சின் என்றும், அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்திய நிலப்பகுதி மட்டுமல்லாது தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் சீனா தங்களுடைய பகுதி என்று உரிமை கோரி இருக்கிறது. மேலும், சீனா தென் சீனக் கடலில் பெரும் பகுதியை தனது நிலம் என்று கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோல ஒரு வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதிலும், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுடைய நிலம் என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதை தங்களது நாட்டு மக்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மேற்கண்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: chinaIndia
ShareTweetSendShare
Previous Post

என்.டி.இராமாராராவ் நூற்றாண்டு! – நினைவு நாணயம் வெளியீடு!

Next Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Related News

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு – வாகன ஓட்டிகள் அச்சம்!

அடுத்த தலைமுறை போர் கப்பல்கள் : தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கொல்கத்தாவின் GRSE நிறுவனம்!

கேரள கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பல் – கொள்கலன்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

ஈஞ்சம்பாக்கம் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் – நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் 7 – போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!

4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாஉள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்!

பொள்ளாச்சி அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர்!

நொய்யல் ஆற்று  வெள்ளப்பெருக்கு – கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies