சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை எனச் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம், சுற்றுலாவைப் புதுப்பிக்கும் வகையில் அனைத்து வகையான வெளிநாட்டுப் பயணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது, “2023 ஆகஸ்ட் 30 முதல், சீனாவிற்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் கொரானா பரிசோதனை எடுக்க வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1.4 பில்லியன் மக்கள் கொண்ட சீனாவில் 1,22,000-க்கும் குறைவான கொரானா இறப்புகள் பதிவாகி உள்ளது.
இதன் பின்னர், 6 மாதங்களுக்கு முன்பு கொரானா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நாட்டின் எல்லைகளை மீண்டும் திறந்து வர்த்தக ரீதியான செயல்பாட்டுக்கு எளிமையாக்கினோம். அதன் பின் எதிர்பார்த்த அளவில் பொருளாதாரம் மீளவில்லை.
இதற்கிடையில், வாகன உற்பத்தி உட்படப் பல நிறுவனங்களின் வணிகத்தை மீண்டும் விரிவுபடுத்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக “ஜீரோ கோவிட்” இருக்கும் காரணத்தால் கொரானா பரிசோதனை தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.