கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஜிம்பாப்வே பொதுத் தேர்தலில், நெல்சன் ஷமிசாவை தோற்கடித்து, இரண்டாவது முறையாக, அதிபர் பதவிக்கு, எமர்சன் நங்காக்வா தேர்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக ஜிம்பாப்வே நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 24-ந்தேதி வரை தேர்தல் நடந்தது.
நான்கு முறை ஜிம்பாப்வே நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபேயின் அரசை, 2017ஆம் ஆண்டில், ராணுவ புரட்சியின் மூலம் எமர்சன் நங்காக்வா ஆட்சியை கைப்பற்றினார். அதன் பின்னர் அரசின் திறன் அற்ற நிர்வாகம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதீத அளவு அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மேற்கத்திய நாடுகள் கடன் உதவிகளை அளித்து உதவின.
அந்த நிதியையும், மக்களின் நலனுக்காக செலவு செய்யாததால் ஜிம்பாப்வே நாட்டின் கடன் தற்போது 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அதிபரை தேர்தெடுக்கும் பொதுத் தேர்தல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. தேர்தலில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் 44 சதவீதம் வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.